இந்த உலகம் உழைப்பால் உருவானது என்று கூறினால் அது மிகையல்ல.

இதில் சிஐடியூ, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கேற்றுள்ளன. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இன்று நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் பொது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.