பிரபஞ்ச அதிபதி

பெரிய யோகிகள் ஸ்ரீ கணேஷனை பிரபஞ்சத்தின் அதிபதி என்று அறிவார்கள், எல்லா பெயர்களுக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்ட மிக உயர்ந்த யதார்த்தத்துடன் நம்மை இணைக்கும் அண்ட நுண்ணறிவு அவர் தான் என்பார்கள். எல்லா கடவுள்களுக்கும் இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் முழு முதல் கடவுளாக இருப்பவர்தான் விநாயகப் பெருமான்.



 


​விநாயகரின் சக்தி



நமக்கு வழிகாட்டும் கடவுள்களில் முதன்மையானவர் விநாயகர். அவர் நம்மை பிரபஞ்சத்தின் சக்திகளுடன் இணைப்பதால் எல்லா இந்து சடங்குகளின் தொடக்கத்திலும் அவர் தான் முன் நிற்கிறார். விநாயகரின் வாகனம் சிறிய சுண்டெலி மட்டுமே இது நமக்கு அவர் சிறிய உயிரினங்களிலிருந்து பெரிய உயிரினங்கள் வரை மரியாதை செய்யக் கூடிய நபர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.



 


​கணபதி பொருள்



கண என்றால் ஒரு குழு என்றும் பதி என்றால் இறைவன் என்றும் அர்த்தம். கணபதியை வெளித்தோற்றமாக பார்க்கும் போது அவர் ஒரு யானை வடிவ உயிரினமாக தெரியலாம் ஆனால் இது வெறும் மேற்போக்கு பார்வை மட்டுமே. உள்ளுக்குள் அவர் அனைத்தையும் அறிந்த கடவுளாக திகழ்கிறார்.


இப்படி விநாயகர் உருவம் வெவ்வேறு விதமான விலங்குகளின் வடிவங்களில் காணப்படுவது வெவ்வேறு ஆன்மாக்களையும், ஆற்றல்களையும் வழங்குகின்றன. அவர் சிவனுக்கு மேல் உயர்ந்தவராக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்.



 


​முழுமுதற் கடவுளாக திகழ்கிறார்