மூத்தோர் சொல் அமிர்தம்

ASA - 90%A ஒரு இளைஞன் ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் மாணவனாகச் சேர்ந்து ஓவியம் பயின்றான். அவரும் அவனுக்கு ஓவியக்கலையை நன்றாகக் கற்றுக் கொடுத்தார். நன்கு கற்றுத் தேர்ந்ததும் இளைஞன் தனது திறமையை பரிசோதிக்க எண்ணினான். அதனால் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு அழகிய ஓவியத்தை வரைந்தான். அந்த ஓவியத்தை மக்கள் பலரும் கூடும் இடத்தில் வைத்து விட்டு அதனருகில் ஒரு பலகையில் “நண்பர்களே! நான் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறேன். நான் புதியவன். ஆதலால் இதில் தவறுகள் இருக்கலாம். நீங்கள் எங்கே தவறிருக்கிறதென்று நினைக்கிறீர்களோ அங்கே ஒரு X குறி இடுங்கள்” என்று எழுதி வைத்து விட்டு வந்துவிட்டான். அன்று சாயங்காலம் அவன் அங்கே போனபோது ஓவியமே தெரியவில்லை . முழுவதும் x குறிகள்தான் இருந்தன. இளைஞன் மனம் உடைந்தான். இவ்வளவு தவறுகளை மக்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்களே. இனி தான் ஓவியமே வரைவதில்லை என்று முடிவெடுத்தான். அவனுக்கு உயிர் வாழவே பிடிக்கவில்லை . தனது குருவை சந்தித்து அழுதுகொண்டே இந்த செய்தியை தெரிவித்தான். அவனை தேற்றிய அவர் “எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு. மக்களின் கணிப்பு தவறென்று உனக்கு நிரூபிக்கிறேன்” என்றார். தயக்கத்துடன் ஒத்துக் கொண்டான். அவனை முன்பு வரைந்த ஓவியம் போலவே மீண்டும் ஒரு ஓவியத்தை வரையச் சொன்னார். அவனும் கஷ்டப்பட்டு முன் வரைந்ததைப் போல் அச்சு அசலாக ஒரு ஓவியத்தை வரைந்தான். குரு அதை எடுத்துக் கொண்டு போய் முன்பு ஓவியத்தை வைத்த அதே இடத்தில் வைத்தார். பக்கத்தில் ஒரு பலகையில், “நண்பர்களே! நான் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறேன். நான் புதியவன் ஆதலால் இதில் தவறுகள் இருக்கலாம். இந்த ஓவியத்தில் நீங்கள் எங்கே தவறைக் கண்டாலும் உடனே அருகிலுள்ள பிரஷையும், பெயின்டையும் கொண்டு சரி செய்யலாம்” என்று எழுதி வைத்துவிட்டு வந்து விட்டார். சாயங்காலம் இருவரும் சென்று பார்த்தனர். ஓவியம் அப்படியே இருந்தது. அதில் யாரும் எந்தத் திருத்தமும் செய்யவில்லை . இப்போது குரு இன்னும் ஒரு நாள் விட்டுப் பார்க்கலாம்” என்றார். மறுநாள், அதற்கடுத்த நாள் கூட யாருமே ஓவியத்தில் திருத்தங்கள் செய்யவில்லை. அப்போது குரு மாணவனிடம் “பார்த்தாயா, குற்றத்தை சுட்டிக்காட்டச் சொன்னால் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள். காட்டியிருக்கிறார்களேகுற்றத்தை திருத்தி மேம்படுத்தச் சொன்னால் யாருமே தயாராக இருக்க மாட்டார்கள். இவர்களுடைய விமர்சனத்தைப் பார்த்து உனது வாழ்வை பாழாக்கிக் கொள்ள இருந்தாயே” என்றார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். - வினைத் திட்பம் இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்வது எல்லோர்க்கும் எளிதாகும். சொல்லியபடியே செய்து முடித்தல் அரியனவாகும்.